இலங்கையை ஆதரிப்பதில் இந்தியா உறுதி! ஜயநாத் கொலம்பகே தெரிவிப்பு.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்தியா, இலங்கையை ஆதரிக்கும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
பிராந்தியத்தின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் இந்தியா இலங்கைக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது என்று ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார் என்று இலங்கையின் தேசிய அபிவிருத்தி தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வல்லரசாக இருக்கும் இந்தியாவை, ஜயநாத் கொலம்பகே பெரிதும் பாராட்டியுள்ளார் எனவும் தேசிய அபிவிருத்தி தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபை விடயத்தில் இந்தியாவின் தீர்மானம் தொடர்பாக இதுவரையில் அந்நாட்டு அரசால் உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.