பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. உலக அளவில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி பிரேசில் அண்மையில் 2-ஆம் இடத்தை பிடித்தது.
பிரேசிலில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 90 ஆயிரத்து 830- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலில் இதுவரை கொரோனா உறுதியானவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 17 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 2,736- பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 85- ஆயிரத்து136- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 11 லட்சமாக உள்ளது.