இலங்கையில் அதிநவீன டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பஸ் நிலையம்.
இலங்கையில் முதல் முறையாக அதிக தொழில்நுட்பம் கொண்ட பஸ் நிலையம் திறப்பு.
இலங்கையில் முதன்முறையாக, சுற்றுச்சூழலுக்கு நெருக்கமான மற்றும் அதிநவீன டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பஸ் நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை, தியனஉயன பிரதேசத்தில் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் தீர்மானத்திற்கமைய ‘m stop’ எனப்படும் இந்த பஸ் நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
20 x 8 அடி அளவில் இலங்கையில் முதல் முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘m stop’ பஸ் நிலையம் மக்கள் பாவனைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் நிலையத்தில் ஏடீஎம் இயந்திரம், ஆசணங்கள், Wi-Fi வசதி, குளிரூட்டப்பட்ட கட்டமைப்பு, CCTV கட்டமைப்பு, தானியங்கி கதவுகள், நகர வரைப்படம், விளம்பரங்களுக்காக டிஜிட்டல் LCD கட்டமைப்பு மற்றும் கையடக்க மீள்நிரப்பு வசதி மற்றும் சிறிய வர்த்தக நிலையம் மற்றும் பஸ் நிலையங்கள் ஆகியவை உள்ளடக்கப்படுகின்றது.