பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரன இன்று கைதடி பனை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விஜயம்.

யாழ் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரன மற்றும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் இன்றைய தினம் (18) காலை நாவற்குழியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விஐயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். வடமாகாணத்தின் பலரது வாழ்வாதாரத்தில் பிரதான ஜீவனோபாய தொழிலாக காணப்படும் பனைவள சார் கைத்தொழிலை அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்ற பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களது “என் கனவு யாழ் ” என்ற எண்ணக்கருவிற்கு யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட பெருந்தோட்டதொழில் அமைச்சர் கௌரவ ரமேஷ் பதிரன அவர்களை பனை அபிவிருத்தி நிறுவனத்திற்கு அழைக்கப்பட்டார்.
பனை சார் சங்கங்களின் பிரதிநிதிகளுடானான கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர் பனை உற்பத்தி பொருட்கள் சார் பல்வேறு முன்மொழிவுகளை சமர்ப்பித்து நிதிகள் ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார். பனம் கள்ளு போன்று பனஞ் சாரயத்திற்கும் வரியை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் கிரிசாந் பத்திராஜ , பனை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் , பனை அபிவிருத்தி நிறுவன உத்தியோகதர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அவ் விஜயத்தினை அடுத்து நவற்குழி பனை ஆராய்ச்சி நிறுவகத்திற்கு முன்பாக (ஏ9 பிரதான வீதியில் அமைந்துள்ள) “கற்பகம்” பனை சார் பொருள் விற்பனை நிலையத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.