விஜய்சேதுபதி அடுத்து நடிக்க உள்ள புதிய படம் பற்றிய அறிவிப்பு.
விஜய்சேதுபதி 2010-ல் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூது கவ்வும், நானும் ரவுடிதான். சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, 96 உள்ளிட்ட படங்கள் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தின. தற்போது வில்லனாகவும் நடிக்கிறார். விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த வில்லன் கதாபாத்திரம் பேசப்பட்டது. மறைந்த ஜனநாதன் இயக்கத்தில் நடித்துள்ள லாபம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் பட வேலைகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்தநிலையில் விஜய்சேதுபதி அடுத்து நடிக்க உள்ள புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை பொன்ராம் இயக்குகிறார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கியவர். பொன்ராம் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. இது அவருக்கு 46-வது படம். ஜோடியாக நடிக்க அனு கீர்த்தியிடம் பேசுவதாகவும் கூறப்படுகிறது.