பரந்தன் பிரிவில் பொதுமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலர் பிரிவுகளில் ஒன்றான கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் பரந்தன் கிராம சேவையாளர் பிரிவில் பொதுமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.
கண்டாவளை பிரதேச செயலர்
திரு.பிருந்தாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் இணைப்பாளர் திரு.தவநாதன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.