நீதி கிடைக்கும் வரைக்கும் கறுப்பு ஞாயிறு போராட்டம்! – கொழும்பு பேராயர் அறிவிப்பு

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் கறுப்பு ஞாயிறு போராட்டம் இன்றும் நடைபெற்றது.

நீதி கிடைக்கும் வரைக்கும் கறுப்பு ஞாயிறு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார்.

மேலும், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணையை நடத்துவதற்கு, அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கடவுளின் தாயின் பரிந்துரைக்காகப் பிரார்த்தனை செய்ய இன்றிரவு 7 மணிக்குச் சிறப்பு சேவையொன்று ராகமவில் உள்ள பசிலிக்கா தேவாலயத்தில் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.