இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆக்கத்திறன் நிகழ்வு!
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கடந்த ஆண்டுக்கான நவராத்திரி விழாவினை முன்னிட்டு அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான ஆக்கத்திறன் நிகழ்வானது நேற்று(21) காலை 09.00மணிக்கு மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் ஆக்கத்திறன்களை பார்வையிட்டனர்.
குறித்த போட்டியில் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கள்ளப்பாடு ஆதிவைரவர் அறநெறிப் பாடசாலை, வட்டுவாகல் சப்தகன்னிமார் அறநெறிப் பாடசாலை, முல்லைத்தீவு வீரகத்திப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலை, மாமூலை மகாவிஷ்ணு அறநெறிப் பாடசாலை, கணுக்கேணி கற்பக விநாயகர் அறநெறிப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பேச்சு, மாலை கட்டுதல், தோரணம் கட்டுதல், நிறைகுடம் வைத்தல், கோலம் போடுதல் ஆகிய போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்ட குறித்த போட்டிகள் தற்போது நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.