கனரக வாகன அனுமதிப் பத்திரத்தோடு பயணிகள் பஸ்களை செலுத்த முடியாது

நாட்டில் அதிகரிக்கும் பஸ் விபத்துக்களை கருத்திற்கொண்டு, புதிய பயணிகள் போக்குவரத்து பஸ் சாரதி அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப் போவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கனரக வாகன அனுமதிப் பத்திரத்தை மாத்திரம் பயன்படுத்தி எதிர்வரும் காலங்களில் பஸ்ஸை செலுத்த முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பயணிகள் போக்குவரத்து சாரதி அனுமதிப் பத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி, பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் சாரதிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கி, அதனூடாக புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து இந்த திட்டத்தை தயாரிக்க உள்ளதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.