ஜெனீவாவில் இந்தியா , இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு?

இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இந்தியா ,இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவோ அல்லது வாக்களிப்பதைத் தவிர்க்கவோ அதிக வாய்ப்புள்ளது என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய ஊடக அறிக்கையின்படி, மனித உரிமைகள் ஆணைய வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பது ஏப்ரல் 06 அன்று நடக்கவிருக்கும் தமிழகத் தேர்தலில் அரசை மோசமாக பாதிக்கும் என கருதப்படுவதே இந்தியா இந்த நிலைப்பாட்டிற்கு வரக் காரணம் என தெரிவித்துள்ளது.