குணச்சித்திர நடிகரான வெங்கடேஷ், மாரடைப்பால் மரணம்.

குணச்சித்திர நடிகரான வெங்கடேஷ், தமிழில் ‘மைனா’, ‘பீட்சா’, ‘பேட்ட’ உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விருதுநகரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் நடிப்புத்துறையின் மீது இருந்த ஆர்வத்தால் சென்னைக்கு குடிபெயர்ந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களிலும், சீரியல்களிலும் நடித்து வந்துள்ளார்.
‘பாரதி கண்ணம்மா’, ‘ஈரமான ரோஜாவே’ ஆகிய தொடர்களில் நடித்து வந்த இவர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 55. நடிகர் வெங்கடேஷுக்கு, பாமா என்ற மனைவியும், நிவேதா என்ற மகளும், தேவ் ஆனந்த் என்ற மகனும் உள்ளனர். நடிகர் வெங்கடேஷின் திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.