இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் பெரும்பான்மையால் நிறைவேற்றம் !

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரில் இலங்கை மீதான வாக்கெடுப்பு இன்று ஆரம்பமாகியது.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் சிறிது நேரத்திற்கு முன்பு ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் எதிராக 11 வாக்குகள் மட்டுமே பதிவாகியது.
14 உறுப்பு நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து விலகி நின்றது