மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வினை திருத்தம் செய்யும் பேரில் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டுள்ளது.
துர்பாக்கிய நிலைமை தொடருமா?
கடந்த ஒரு மாத காலமாக மன்னார் மாவட்டத்தில் அனைத்துப் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட இடங்களிலும் பகுதிபகுதியாக பிரதேச செயலாளர் ஊடாகவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரூடாகவும் 15.03.2021 திங்கட்கிழமை அன்று நிறுத்தப்பட்டதோடு மணல் அகழ்வு நடைபெற்ற அனைத்து இடங்களையும் அரசாங்க அதிபரோடு இணைந்து அரச அலுவலர்களும் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இச் செயற்பாடானது சென்ற செவ்வாய் கிழமை அதாவது 16.03.2021 அன்றோடு அனைத்தும் பார்வையிட்டு முடிவுற்றுள்ளது.
இதில் தெள்ளத் தெளிவான உண்மை என்னவெனில் மணல் அகழ்வு சம்மந்தமாக அரசாங்கத்திற்கு வரி செலுத்தி நேர்மையுடன் செயற்படுபவர்களை மட்டுமே இவர்களால் நிறுத்த முடிந்ததே தவிர மணல் திருடர்களை அல்ல.
இச்செயற்பாட்டினால் மண்ணின் விலையினை அதிகரித்தது மட்டுமே நிதர்சனமான உண்மையாகும்.
அத்தோடு இன்று வரை அரச அதிகாரிகளினால் தடை செய்யப்பட்ட இடங்களிலுமிருந்து களவாகவும் திருட்டுத்தனமாகவும் மணல் கொண்டு செல்பவர்களை யாராலும் நிறுத்த முடியவில்லை. இது மன்னார் வாழ் மக்கள் யாவரும் அறிந்த உண்மையே.
இது வரையில் எந்தவொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் சட்டவிரோத மணல் அகழ்வு நிறுத்தப்பட்டவில்லை. அது ஏன்? இந்த அரச அதிகாரிகள் சட்டங்கள் நியாயங்கள் எல்லாம் நேர்மையுடன் செயற்படுபவர்களுக்கு மட்டும் தானா?
திருடர்களுக்கு இல்லையா?
இத் திருடர்களின் செயற்பாட்டினால் அரசாங்கத்திற்கு இலாபமா அல்லது அரச அதிகாரிகளுக்கு இலாபமா?
இதன் உண்மையின் வெளிப்பாடுதான் என்ன?