மோட்டார் சைக்கிள் வீதி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி.

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி க்கும் வெருகலுக்கும் இடைப் பட்ட மட்டக்களப்பு திருகோணமலை சாலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பால்சேனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆ.தீபன் என்பவர் பலியானார்.
இவரின் சடலம் தற்போது கதிரவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.