எதேச்சாதிகார அட்டூழியங்களை மறைக்கவே 11 நாடுகள் எதிர்ப்பு : முன்னாள் அமைச்சர் மங்கள ‘ருவிட்’

தமது சொந்த எதேச்சாதிகாரங்களால் நடந்த அட்டூழியங்களை மறைப்பதற்காகவே 11 நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்துக்கு ‘இல்லை’ என வாக்களித்துள்ளன என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை மீதான ஐ.நா. தீர்மானம் குறித்து ரூவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் இணை அனுசரணையில் இலங்கை 2015 ஆம் ஆண்டு அதன் சொந்த நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்மொழிந்தபோது, சீனா, ரஷ்யா உட்பட முழு உலகமும் இலங்கையுடன் இருந்தன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்போது இலங்கைக்கு 11 நண்பர்களே உள்ளனர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.