கத்தியுடன் குதிரையில் வேட்டையாடும் கர்ணன் தனுஷ்.. (Video)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படம் வெளியாக உள்ளது.
கர்ணன் படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்ததாக கர்ணன் படத்தின் டீசர் எப்போது என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பே தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் டீசர் சீக்கிரம் வரும் என தெரிவித்திருந்தார். ஆனால் அறிவிப்பு வந்து வாரக்கணக்காகியும் நீண்ட நாட்களாக அறிவிப்பு வராததால் ரசிகர்கள் சோர்வுடன் காணப்பட்டனர்.
இந்நிலையில் மிரட்டலான போஸ்டருடன் கர்ணன் படத்தின் டீசர் வருகின்ற மார்ச் மாதம் 23 ஆம் தேதி வெளியாகும் என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். கர்ணன் படத்தின் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை பெருமளவில் எதிர்பார்க்க வைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் கர்ணன் படத்தின் டீசரை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் ஒவ்வொரு காட்சியையும் சிலாகித்துக் கூறியதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.
அந்த வகையில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கர்ணன் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி பல சாதனைகள் புரிந்து வருகிறது.