பசறையில் விபத்து இடம்பெற்ற இடத்தில் வேக கட்டுப்பாட்டு தடைத்திட்டு அமைப்பு!

பசறை 13 ஆம் கட்டைப்பகுதியில் பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்தில், தற்போது வாகனங்கள் வேகமாக செல்வதைக் கட்டுப்படுத்துவதற்காகவும், விபத்துகளை தடுப்பதற்காகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வீதியில் வேக கட்டுப்பாட்டு தடைத்திட்டு இன்று அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த இடத்தில் நிறம்பி இருந்த கல் பாறையும் அகற்றப்பட்டது.
பசறை விபத்தில் 15 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.