எவர்கிரீன் கப்பல் சிக்கியதால் 206 கப்பல்கள் பயணிக்க முடியாத நிலை
400 மீட்டர் நீளமும், 95 மீட்டர் அகலமும் உள்ள எவர்கிரீன் கப்பல் காற்றின் வேகத்தில் அடித்துக் கொண்டு சென்று சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டதால் சுமார் 206 சரக்குக் கப்பல்கள் அப்பகுதியை தாண்டி செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
சுழியோடிகள் , கப்பலைச் சுற்றி தடையாகவுள்ள 15,000-20,000 கன மீட்டர் மணலைத் தோண்டி அகற்ற முயன்று கொண்டிருக்கிறார்கள் . அதே நேரத்தில், கப்பலில் உள்ள சுமை சுமார் 200,000 டன் எடையைக் கொண்டிருக்கிறது.
சூயஸ் கால்வாய் , ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் ஒரு பரபரப்பான கப்பல் பாதையாகும்.
கப்பலின் ஜப்பானிய உரிமையாளர் அனைத்து கப்பல்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார். உலகின் ஏறத்தாழ 30% கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக ஒரு நாளைக்கு 193 கிலோமீட்டர் (120 மைல்) தூரம் பயணம் செய்கின்றன , இது மொத்த சரக்கு விற்பனையில் சுமார் 12% ஆகும்.
ரஷ்யா, சவுதி அரேபியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் கச்சா எண்ணெயை அதிக அளவில் இந்த வழியினூடாகவே ஏற்றுமதி செய்கின்றன. இந்தியா, சீனா மற்றும் தென் கொரியா ஆகியவை எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளாக உள்ளன.
ஜெர்மனியின் ரசாயன இறக்குமதியில் சுமார் 16% சூயஸ் கால்வாய் வழியாக கப்பல் மூலமாக வருவதாக தெரிவித்த, ஜேர்மன் கெமிக்கல் மருந்துகள் மற்றும் மருந்து உற்பத்தியாளர்களின் தலைமை பொருளாதார நிபுணர் வி. சி. ஐ. ஹென்ரிச் இந்த சிக்கலால் ஜெர்மனி தொழில்துறைபாதிக்கிறது என தெரிவித்துள்ளார்.
(ராய்ட்டர்ஸிலிருந்து).