கொத்தவரையில் நார்ச்சத்து இருப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தினைக் குறைக்க உதவுகிறது.
சுவையான உணவான கொத்தவரையில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
கொத்தவரையில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தினைக் குறைக்க உதவுகிறது.
மேலும், இதில் உள்ள மாவுச்சத்தும், புரதச்சத்தும் உடலுக்கு நல்ல எரிசக்தியைத் தந்து உடல் இயக்கத்துக்குத் துணை செய்கிறது.
கொத்தவரையில் விட்டமின் ‘ஏ’ சத்தும், விட்டமின் ‘சி’ சத்தும், விட்டமின் ‘கே’ மற்றும் “போலேட்ஸ்” ஆகியன அடங்கியுள்ளன.
இதில் விட்டமின் ‘சி’ சத்து மிகுதியாக உள்ளதால் பற்களையும் எலும்புகளையும் பலமுடையதாகச் செய்யத் துணை புரிகிறது.
இதில் அடங்கியுள்ள விட்டமின் ‘கே’ சத்து கர்ப்பிணிகளின் வயிற்றில் உதித்து வளர்ந்து வரும் கரு சீராகவும் வலுவாகவும் வளர வகை செய்கிறது.
கொத்தவரை மலச்சிக்கலைத் தீர்க்க உதவுகிறது. மேலும் பேதியை நிறுத்தவும், வயிற்றுப் போக்கைத் தடுக்கவும், உடல் பருமன் ஆகியவற்றைக் குறைக்க உதவி செய்கிறது.
ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து மாரடைப்பு வராத வண்ணம் தடுத்து உதவுகிறது.
கொத்தவரையின் இலைகள் ஆஸ்துமா நோயைத் தணிக்க உதவுகிறது.
மேலும் கொத்தவரைச் செடி பசி அடக்கியாகவும், வலி நிவாரணியாகவும், நுண்கிருமி நாசினியாகவும், வீக்கம் கரைச்சியாகவும், வற்றச் செய்யும் குணமுடையதாகவும், வயிற்றுப் புழுக் கொல்லியாகவும், ஒவ்வாமைப் போக்கியாகவும், மூட்டு வலிக் குறைப்பானாகவும், கட்டிகளைக் கரைக்கவும் உதவுகிறது.