பசறையில் விபத்துக்குள்ளான பஸ் மீட்கப்பட்டது!

பசறை 13ஆம் கட்டையில் கடந்த 20 ஆம் திகதி விபத்துக்கு உள்ளான பேருந்து இன்றைய தினம் கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் மீட்டக்கப்பட்டது.
கடந்த 3 தினங்களாக பேருந்தை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அம்முயற்சி பலனலிக்காத நிலையில் இன்றைய தினமே பேருந்து மீட்கப்பட்டது.
விபத்துக்கு உள்ளான இப் பேருந்தில் பயணித்த 15 பேர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.