தனிமையில் வசித்த ஆண் ஒருவர் வெட்டிக்கொலை.

புத்தூர் வீரவாணி தனிமையில் வசித்த ஆண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அச்சுவேலி காவற்துறையினர் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் அவரது வீட்டுக்கு அருகில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த துரைராசா சந்திரகோபல் (வயது-52) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் இருந்த பழைய பகையை வைத்து சிலர் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் காவற்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.