அரசியல் தீர்வு கட்டாயம் வேண்டும்; சர்வதேசத்தின் விருப்பமும் இதுவே – அரசிடம் திஸ்ஸ எம்.பி. இடித்துரைப்பு.
“இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்குவது கட்டாயமானது. இதனையே சர்வதேசமும் ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்துகின்றது.”
இவ்வாறு லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையின் சுயாதீனத்தன்மைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வழங்க முடியும். சமர்ப்பிக்கப்பட்டுள்ள சர்வகட்சித் தலைவர் குழு அறிக்கையில் அதற்கான பொறிமுறைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. சர்வ கட்சி தலைவர் குழு அறிக்கையைச் செயற்படுத்தியிருந்தால் பல பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கப்பெற்றிருக்கும்” – என்றார்.