யாழில் இருந்து வவுனியா வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வரும் பயணிகளுக்கு வவுனியாவில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா ஊடாக பயணிக்கும் பேருந்துகளை வழி மறித்து வவுனியாவில் இறங்கவுள்ள பயணிகளிடமே குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அங்கிருந்து வவுனியாவிற்கு வரும் பயணிகளுடாக வவுனியாவிற்கும் தொற்று பரவுவதை தடுப்பதற்கே குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.