கிளிநொச்சியில் நவீன தொழில்நுட்பத்துடன் புதையல் தோண்ட முற்பட்டவரகள் கைது.
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த காட்டுப் பகுதியில் வைத்து ஐவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் புலானாய்வுத்துறையினர் தீவிர விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சி வட்டக்கச்சி மாயனூர் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட அன்பு முகாம் என்றழைக்கப்பட்ட பகுதியிலே புதையல் தோண்டும் பணி இடம்பெற்றுள்ளது.
நேற்று நள்ளிரவு மாயனூர் காட்டுப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட போதே இராணுவப் புலனாய்வாளர் மற்றும் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை, கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கேனிங் கருவி மற்றும் ஏனைய பொருட்கள் இவர்கள் பயணித்த மோட்டார் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
9