தான்சானியா அதிபர் இறுதிச்சடங்கில் நெரிசலில்… உடல் நசுங்கி 45 பேர் உயிரிழப்பு.

தான்சானிய அதிபர் ஜான் மகுஃபுலியின் இறுதிச்சடங்கின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மிதிபட்டு 45 பேர் உடல் நசுங்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் காலமான முன்னாள் அதிபர் உடலைக் காண ஏராளமானோர் திரண்டிருந்தனர். பலர் அவர் உடலைக் காண சுவர்களின் மீதும் ஏறி நின்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக நெரிசல் அதிகரித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலர் கீழே விழுந்து மிதிபட்டு நசுங்கினர். இதனைத் தொடர்ந்து அரசு மரியாதையுடன் முன்னாள் அதிபரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.