பொலிஸாருக்கு 1,000 ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்ட சாரதி கைது.

பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 1,000 ரூபா பணத்தை இலஞ்சமாக வழங்க முற்பட்ட சாரதி ஒருவர் பாணந்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சாரதி அனுமதி பத்திரமின்றி வாகனம் ஒன்றை செலுத்திய நபரை நேற்று (31) பாணந்துறை நகரில் வைத்து குறித்த பொலிஸ் அதிகாரி சோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் குறித்த நபர் பொலிஸ் அதிகாரிக்கு 1,000 ரூபா பணத்தை இலஞ்சமாக வழங்க முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.