யாழ். நாவற்குழியில் பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது!

யாழ்ப்பாணம், நாவற்குழிப் பகுதியில் சாவகச்சேரி பிரதேச சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் இராமநாதன் யோகேஸ்வரனைக் கத்தியால் வெட்டியும் கற்களால் தாக்கியும் தலையில் படுகாயங்களை ஏற்படுத்தியமை தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் சந்தேகநபர்களை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சாவகச்சேரி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.