குடத்தனை வீட்டில் தனித்திருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, குடத்தனைப் பகுதியில் இன்று காலை வீட்டில் தனியே தங்கியிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடத்தனை, தரவைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய முகுந்தன் சுலக்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்த்தனர்.
குறித்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சப்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.