பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச்செய்தி.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தியின் ஒளி சக மக்களுக்கும் நிவாரண ஒளியை அனுபவிப்பதற்கு இடமளிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில், இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தமையை மகிழ்வுடன் கொண்டாடும் தினம் உயிர்த்த ஞாயிறு தினமாகும். இயேசு கிறிஸ்து, மரணத்தை தோற்கடித்து உயிர்த்தெழுந்த இத்தினத்தை இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் கிறிஸ்தவர்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு முன்னதாக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி தினம் நினைவுகூர்கின்றது.

இதற்காக அவர்கள் நாற்பது தினங்கள் ஜெபம், தியானம் செய்து விரதமிருந்து மற்றும் பல்வேறு புண்ணிய செயல்களை மேற்கொண்டு ஆன்மீக நிவாரணத்திற்காக பிரார்த்திப்பார்கள்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தியின் ஒளி சக மக்களுக்கு நிவாரண ஒளியை அனுபவிப்பதற்கு இடமளிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

ஒரு தியாக வாழ்க்கையின் மதிப்பையும், தைரியம் மற்றும் வலிமையையும் வாழ்க்கையில் அடைவதற்கான ஆன்மீக பாதையை எட்டுவதற்கு இன்றைய தினம் அனைவருக்கும் ஒரு முக்கியமான நாளாகும்.

வாழ்க்கையின் எடுத்துக்காட்டலின் உண்மையான வாழ்க்கை மாற்றத்தை அனுபவித்து, சமூகத்தில் எதிர்கொள்ள நேரிடும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அனைத்து கிறிஸ்தவர்களும் இரக்கம், நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர அன்புடன் வாழ நான் பிரார்த்திக்கின்றேன்.

இலங்கை வாழ் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.