பிரான்ஸில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்தால் நாட்டின் மூன்றாவது பொது முடக்கம் அமுல்.
பிரான்ஸில் கொரோனா தொற்று அதிகரித்து நாட்டின் மருத்துவ மனைகள் நிலைகுலையும் அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் சூழலில் தேசிய அளவில் மூன்றாவது பொது முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி அனைத்து பாடசாலைகள் மற்றும் அத்தியாவசியமற்ற கடைகள் நான்கு வாரங்களுக்கு மூடப்பட்டு இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான நோயுற்ற நிலையில் 145 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஐந்து மாதங்களில் பெரும் அதிகரிப்பாக உள்ளது.
கொரோனா நோயாளர்களுக்கு அதிக மருத்துவமனை படுக்கைகளை வழங்க ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் வாக்குறுதி அளித்துள்ளார்.
பிரான்சில் தற்போது சுமார் 5,000 கொரோனா நோயாளர்கள் அவசர சகிச்சை பிரிவில் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை 46,677 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதோடு மேலும் 304 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்ட நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை தொடக்கம் நியாயமான காரணம் இன்றி தமது வீட்டில் இருந்து 10 கிலோமீற்றருக்கு அப்பால் பயணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.