புத்தாண்டு சுபநேர பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு.
சிங்கள, தமிழ் புத்தாண்டு சுபநேர பத்திரம் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (06) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
பாரம்பரியங்களுக்கேற்ப சுபநேரங்களை அடையாளப்படுத்திய பத்திரம் தேசிய மரபுரிமைகள், அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
புதுவருடப் பிறப்பு, புண்ணியகாலம், உணவு சமைத்தல், அடுப்பு மூட்டுதல், உணவு பரிமாறுதல், தலைக்கு எண்ணெய் வைத்தல் மற்றும் தொழிலுக்காக புறப்படுதல் ஆகிய விடயங்கள் சுபநேர பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தேசிய மரபுரிமைகள், அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் நிஷாந்தி ஜயசிங்க, கலாசார அலுவல்கள் பணிப்பாளர் தரணி அனோஜா கமகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.