கப்பல் ஒன்று மோதி, பயணிகள் கப்பல் ஆற்றில் கவிழ்ந்தது – சுமார் 27 பேர் பலி.

வங்காளதேசத்தில் சரக்கு கப்பல் ஒன்று மோதி, பயணிகள் கப்பல் ஆற்றில் கவிழ்ந்தது – சுமார் 27 பேர் பலியாகியுள்ளனர்
வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக நீர்வழி போக்குவரத்து மிகவும் பிரதானமான போக்குவரத்து மார்க்கமாகும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு மக்கள் பெரும்பாலும் நீர்வழி போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் தலைநகர் டாக்காவில் இருந்து நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள முன்ஷிகாஞ்ச் மாவட்டத்துக்கு பயணிகள் கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இதில் சுமார் 150 பயணிகள் வரை இருந்துள்ளனர். இந்தக் கப்பல் அந்த நாட்டின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான ஷிதலக்கியா ஆற்று வழியாக பயணிக்கும் பாேது எதிர்பாராத விதமாக எதிர்திசையில் வந்த சரக்கு கப்பல் ஒன்று இந்த பயணிகள் கப்பல் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சுமார் 27 பேர் வரை பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.