மகுடத்தை மீண்டும் பெற்றார் புஷ்பிகா டி சில்வா.
திருமதி இலங்கை அழகுராணி போட்டியில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து மீண்டும் புஷ்பிகா டி சில்வாவிற்கு மகுடம் இன்று சூட்டப்பட்டது.
கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
2020ம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகுராணியாக புஷ்பிகா டி தெரிவாகிய நிலையில், அவரின் மகுடம் அதே மேடையில் நேற்று பறிக்கப்பட்டது.
மேலும், விவாகரத்து பெற்றவர் என தெரிவித்தே இந்த மகுடம் பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.