ரஞ்சன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் (வீடியோ)

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற பதவியை இழந்துவிட்டதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

சபாநாயகர், அது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு பாராளுமன்ற பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 மாதங்களுக்கு மேல் நாடாளுமன்றத்துக்கு வராத நிலையில் அவரது பதவி பறி போயுள்ளது. இந்த அறிவிப்பு வந்ததும் நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சியினர் எதிர்ப்பை தெரிவித்து கூச்சல் எழுப்பினர்.

வீடியோ:

பிந்திய செய்தி
கம்பஹா மாவட்ட, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இன்றைய (07) பாராளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வகையில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு,

“சட்ட ஆலோசனையை கருத்தில் கொண்டும், அரசியலமைப்பின் விதிமுறைகளுக்கமைய, 1981 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 64(1) இற்கு அமைய, 9ஆவது பாராளுமன்றத்தின், கம்பஹா தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஏ.ஏ. ரஞ்சன் லியோ சில்வஸ்டர் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையானது, அரசியலமைப்பின் 66 (D) இற்கு அமைய வெற்றிடமாக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.”

Leave A Reply

Your email address will not be published.