அரச வங்கி ஊழியர்கள் வரி விதிப்புக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னால் இலங்கை அரச வங்கி ஊழியர்கள் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டமொன்று இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த பணிப் பகிஷ்கரிப்பும், கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
வங்கி ஊழியர்கள் பெறும் கடன்களுக்கு அரசாங்கத்தினால் மேலதிக வரி விதிக்கப்பட்டுள்ளதை நீக்குமாறும், ஓய்வூதிய பிரச்சினைகளை தீர்க்குமாறும் இதன்போது அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
‘ஊழியர்களின் உணவுக்கும் தேனீருக்கும் வரிவேண்டாம் ஊழியர்களின் கடன்களுக்கு வரிவேண்டாம் ஓய்வூதிய கொடுப்பனவு வழுக்களை திருத்துக ஏற்றுக்கொள்ளத்தக்க ஓய்வூதிய கொடுப்பனவை தாருங்கள்’ உட்பட பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
இதன்போது அரசாங்கம் தமது நியாயமான கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளுமாறு கோஷங்களையும் எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
முன்னேடுக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் பல ஊழியர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.