சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோருக்கு ஓராண்டு சிறை.
நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காசோலை மோசடி வழக்கில் அவர்கள் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது என்ன மாயம் என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ரேடியண்ட் நிறுவனத்திடம் பணம் பெற்ற விவகாரத்தில், பணத்தை திரும்ப அளிக்காததால், ரேடியண்ட் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது.
2014-ம் ஆண்டு ரூ.1.50 கோடி ரேடியன்ஸ் நிறுவனத்திடம் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் சார்பில் கடனாக பெற்றுள்ளார். கடனைத் திருப்பி அளிப்பதில் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சரத்குமார் மீது 7 வழக்குகளும், ராதிகா மீது இரண்டு வழக்குகளும் தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை மேற்கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மேஜிக் ப்ரேம் நிறுவன பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீபனுக்கும் நீதிமன்றம் ஒரு வருடமும் சிறை தண்டனை விதித்துள்ளது.