புலிகளின் தலைவர் படத்தை தொலைபேசியில் வைத்திருந்த யாழ் இளைஞன் கைது.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தை கைத்தொலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றய தினம் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞன் ஒருவன் கைத்தொலைபேசியில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொலிஸாரினால் நேற்றய தினம் கைது செய்யப்பட்டார்.
குறித்த இளைஞன் இன்று யாழ்.நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.