யாழ்.நகரப் பகுதி ஓரளவு வழமைக்கு திரும்பி வருகின்றது.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த 26ஆம் திகதி முதல் மூடப்பட்ட யாழ்.நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர் அல்லது பணியாளர் உள்ள சுமார் 75 வர்த்தக நிலையங்கள் தவிர்த்து ஏனைய வர்த்தக நிலையங்கள் இன்று (08) திறக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து யாழ்.நகரப் பகுதி ஓரளவு வழமைக்கு திரும்பி வருகின்றது. நாளை முதல் யாழ்.நகர் சந்தையும் திறக்கப்படவுள்ளது.
மேலும் வழமைபோன்று யாழ்.மாநகர மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், தனியார் சேவை வழமையான தரிப்பிடங்களில் இருந்தும் பேருந்து சேவைகளை நடந்துவருகின்றனர்.