எண்ணெய் இறக்குமதிக்கும் தடை விதித்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கடிதம்.
இலங்கையில் செம்பனை பயிர் செய்கைக்கும் மற்றும் செம்பனை எண்ணெய் இறக்குமதிக்கும் தடை விதித்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
பாம் எண்ணெய் இறக்குமதி தடை விதிப்பு தொடர்பில் அவர் ஜனபதிபதிக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு இதனைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
அவர் தொடர்ந்து அக்கடிதத்தில் குறிப்பிடுகையில் சௌபாக்கிய நோக்குமற்றும் 2021 ஏப்ரல் 5 ஆம் திகதியில் ஜனாதிபதி செயலகத்தின் இல 21,87 அறிக்கையில் சம்பந்தமான ஊடக வெளியிட்டின்படி, இலங்கையில் செம்பனை எண்ணெய் இறக்குமதி மற்றும் செம்பனை பயிர்ச்செய்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையிட்டு ஜனாதிபதி இலங்கை பொதுமக்கள் சார்பாக மனித அபிவிருத்திதாபனம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.
அண்மைக்காலமாக இலங்கையில் செம்பனை பயிர் செய்கைக்கு எதிரான பல்வேறு எதிர்ப்புகள் இடம்பெற்றுவந்தன. சுகாதாரம்,சுற்றுப்புறச் சுழல் மற்றும் சமூக,பொருளாதார பாதிப்புகள் என்பவற்றை கருத்திற்கொண்டு,செம்பனை உற்பத்தியானது இலங்கைக்கு ஏற்றதொரு பயிர்செய்கையல்ல என்றும் இதனால் கிராமியமற்றும் பெருந்தோட்டத்துறை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும்,மதகுருமார்கள் சுற்றாடல் குழுக்கள்,பொதுமக்கள் மற்றும் மத்தியசுற்றாடல் அதிகாரசபையினர் குறிப்பிட்டுவந்தனர்.
இது குறித்து மனித அபிவிருத்தி தாபனமும் ஜனாதிபதி அவர்களுடைய கவனத்திற்கு ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது. இவ்வடிப்படையில் செம்பனை எண்ணெய்,மற்றும் செம்பனை பயிர்செய்கை என்பவற்றிலிருந்து இலங்கையை விடுவிப்பது சம்பந்தமாக ஜனாதிபதி தற்போதைய அரசாங்கமும் தீர்மானித்தது குறித்து எமது மனபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இலங்கை மக்களை பாதுகாப்பது குறிப்பாக பெருந்தோட்டமக்களை பாதுகாப்பது சம்பந்தமாக எடுக்கப்பட்ட இந்ததீர்மானம் காலத்தில் எடுக்கப்பட்ட சிறந்த தீர்மானமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(இக்பால் அலி)