மணிவண்ணனனுக்கு பிணையில் செல்ல அனுமதி
யாழ். மேயர் மணிவண்ணன் அவர்களுக்கு 2 லட்சம் சரீர பிணையில் செல்ல நீதிபதி சதீஸ் குமார் அவர்கள் அனுமதியளித்ததாக ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் தெரிவித்தார்.
இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120,332,343 இன் கீழ் முற்படுத்தப்பட்டார். குறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உட்பட 20 க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.
இன்றைய தினம் யாழ். மேயர் மணிவண்ணன் அவர்களை விடுதலை செய்ய யாழ் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் இருந்து பல சட்டத்தரணிகள் வந்திருந்ததாகவும் , அவர்களுக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக யாழ்.மேயர் மணிவண்ணன் ஊடகங்களிடம் தெரிவித்தார். நாளை மீண்டும் அவர் தனது பணியை தொடங்கவிருப்பதாக மேலும் அவர் தெரிவித்தார்.