தமிழ் சைகைமொழிப் பாடநெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

யாழ். மாவட்ட கட்டளைத் தலைமையகம் மற்றும் சாதாரண இனங்களுக்கிடையேயான
நல்லிணக்கத்தினை மேலும் வளர்க்கும் வகையில் காங்கேசன்துறை, சித்தங்கேணி மற்றும் கோப்பாய் ஆகிய பிரதேசங்களில் யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி அவர்களுடைய
எண்ணக்கருவிற்கு அமைவாக மூன்று நல்லிணக்க மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள நல்லிணக்க மையத்தில் விது நம்பிக்கை நிறுவனத்தின் பூரண
அனுசரணையுடனும் வடமராட்சி செவிப்புலனற்றோர் சங்கமும் மற்றும் இராணுவத்தினரும் இணைந்து
ஆரம்பிக்கப்பட்ட விசேட தமிழ் சைகைமொழிப் பாடநெறியினை இனிதாக நிறைவு செய்தவர்களுக்கான
சான்றிதழ்கள் வழங்கும் வைபவமானது யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் தலைமையில் 2021 சித்திரை மாதம் 08 ஆம் திகதி அன்று காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள தல்செவன இராணுவ விடுமுறை விடுதியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஏறக்குறைய ஆறு மாதங்கள் நடைபெற்ற இப்பாடநெறியில் பயிற்சியை
நிறைவுசெய்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் 21 பேருக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சான்றிதழ் வழங்கும் வைபவத்திற்காக வடமாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர், 51 தரைப் படைப்பிரிவின் கட்டளைத்தளபதி, 515 தரைப் படைப்பிரிவின் படைத்தளபதி, சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள், இராணுவவீரர்கள், செவிப்புலனற்றோர ; சங்கத்தின் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் நல்லிணக்க மையத்தின் ஊழியர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.