மாகாண சபைத் தேர்தலில் தொகுதிக்கு 3 வேட்பாளர்கள்! – ஆளும் தரப்பு பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பு.
மாகாண சபைத் தேர்தலில் கட்சியொன்றின் 3 வேட்பாளர்களைத் தொகுதிக்கு முன்னிறுத்தும் யோசனையை நிராகரிப்பதற்கு ஆளும் கட்சியின் சில பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகளின் கலந்துரையாடலின்போதும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எது எவ்வாறாயினும், ஏப்ரல் 19ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின்போது குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.