தோட்டக் கம்பனிகளுக்கு செந்தில் தொண்டமான் எச்சரிக்கை.
பதுளை மாவட்டத்திலுள்ள பல தோட்டங்களில், தோட்ட தொழிலாளர்களுக்கு மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவை வழங்க கம்பனிகள் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் ஆராய்வதற்காக செந்தில் தொண்டமான் தோட்டங்களுக்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடினார்.
அக்கலந்துரையாடலின் போது தோட்ட நிர்வாகத்தின் அராஜக போக்கை செந்தில் தொண்டமான் கண்டித்ததுடன், அடிப்படை சம்பளம் 700 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார்.
இதில் கொடுப்பனவுகள் உள்ளடக்கப்படவில்லை என்பதை மக்களுக்கு விளக்கப்படுத்தினார்.
மேலதிக வேலைகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் வழங்கினால் மாத்திரமே எதிர்காலத்தில் மேலதிக வேலைத்திட்டங்களை தொழிலாளர்கள் முன்னெடுப்பார்கள் எனவும் அவ்வாறு வழங்கப்படாத பட்சத்தில் தற்போது 30 நாள் செய்யும் வேலையை 20 நாட்களில் தொழிலாளர்கள் செய்து வருவது, மீண்டும் 30 நாட்களாக அதிகரிக்கும்.
இதனால் கம்பனிகளுக்கு ஒரு நாளுக்கு 1000 ரூபாய் படி 30 நாட்களுக்கு 30000 ரூபாய் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கும் நிலைமை ஏற்படும் என்று கம்பனிகளை செந்தில் தொண்டமான் எச்சரித்துள்ளார்.