மொட்டு’ கூட்டணிக்குள் பூகம்பம்! – பங்காளிகளை 19இல் சந்திக்கிறார் மஹிந்த.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எதிர்வரும் 19ஆம் திகதி முக்கியத்துவமிக்க சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது எட்டப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே கூட்டணியின் தலைவிதி நிர்ணயிக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அரசில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட 11 கட்சிகள் இணைந்து மே தின நிகழ்வைத் தனியாகவும், ஆளுங்கூட்டணியின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனிமாகவும் மேதின நிகழ்வுகளை நடத்துவதற்கு தயாராகி வருகின்றமை ஆளுந்தரப்புக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆளுந்தரப்பால் முன்வைக்கப்பட்ட புதிய யோசனைக்கு 11 பங்காளிகளும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஆளுங்கட்சியின் பங்காளிகளைப் பிரதமர் சந்திக்கின்றார்.
கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு இதன்போது முடிவு கட்டப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது