கொழும்பு அரசியலில் தொடர் பரபரப்பு! மைத்திரி – விமல் இரகசிய சந்திப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்சவுக்கும் இடையில் இரகசியமான சந்திப்பு இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசுக்கும் அரசாங்க பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இவ்வாறு சந்திப்பு இடம்பெற்றுள்ளது எனவும் அறியமுடிகின்றது.
இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், அரசில் அங்கம் வகிக்கும் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில், கடந்த வியாழக்கிழமை இரவு முக்கிய சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இந்தச் சந்திப்பு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றிருந்தது. அதன் பின்னரே மைத்திரிக்கும் விமலுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது எனவும் அறியமுடிகின்றது.