இந்தியாவில் தொடங்குகிறது கொரோனா தடுப்பூசி திருவிழா.

கொரோனா தடுப்பூசி பணிகளை வேகப்படுத்தத் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தொடங்கி நான்கு நாட்களுக்குத் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. இதில் தினசரி 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மாநில சுகாதார துறை திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த நான்கு நாட்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்பச் சுகாதார மையங்கள், மினி கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகள் என 4,328 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் 18 லட்சம் தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.