வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் ராணுவத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம்; சவேந்திர சில்வா!
வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் ராணுவத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என யாழில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவத்தை கொண்ட கணவனை யுத்தத்தின் போது இழந்த குடும்பத்தினருக்கு ஒரு வீட்டினை இராணுவத்தினரால் அமைத்து கொடுத்திருக்கின்றோம்.
அவர் தனது கணவனை இழந்த பின்னரும் தனது விடா முயற்சியின் காரணமாக சுய தொழிலினை வாழ்வாதாரமாக மேற்கொண்டு வாழ்ந்து வரும் நிலையில் ராணுவத்தினரின் உதவியுடன் இந்த வீடானது இன்றைய தினம் கட்டி முடிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
இலங்கை ராணுவத்தினர் வீட்டை மட்டுமல்லாது வீட்டுக்குத் தேவையான குளிர்சாதனைப்பெட்டி உட்பட்ட அனைத்து பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த குடும்பத்தில் ஒரு மாணவியும் உள்ளார். அவருக்கான கல்விக்கான நிதி உதவி மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்திருக்கின்றோம். அத்தோடு மேலதிகமான அந்த மாணவிக்கு உரிய கல்வி செயற்பாடுகளுக்கு உதவ தயாராகவுள்ளோம்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்த காலத்தில் இடம்பெற்ற சண்டையின் போது கொல்லப்பட்ட ஒருவருக்கே இன்று இராணுவத்தினரால் அமைத்துக் கொடுத்திருக்கிறோம் இலங்கை இராணுவமானது ஒரு மனிதாபிமான ஒரு ராணுவம் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.
இலங்கையின் முப்படையினரும் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான செயற்பாட்டை முன்னெடுக்கிறார்கள் என யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். ஏனைய தமிழ் மக்களுக்கும் அது நன்றாக புரியும்.
ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் இங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் முகமாக இங்குள்ளவர்களுக்கு காசுகளை அனுப்பி இங்கு காசு வருகிறவர்கள் அல்லது வெளிநாட்டு தொடர்பு கொண்டுள்ளவர்கள் இங்கே ராணுவத்துக்கு எதிரான பொய் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றார்கள். இந்த ராணுவம் கொடுமையானது ராணுவம் இங்கே தேவையற்றது என ஆனால் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள் இங்கு உள்ள இராணுவத்தினரால் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யப் படுகின்றது.
அத்தோடு தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் முப்படையினரும் புரிவோம். அத்தோடு இன்றைய தினம் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்குடிமகன் ஒருவருக்கு இந்த வீட்டை அமைத்துக் கொடுத்ததை யிட்டு இலங்கை ராணுவத்தினர் ஆகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று நாம் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து உள்ளேன்.
அத்தோடு கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளேன். அத்தோடு தற்போதுள்ள கொரோனா நிலையினை எவ்வாறு நிர்வகிப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் நான் இன்று ஆராய்ந்து இருந்தேன் எதிர்வரும் நாட்களில் சிங்கள தமிழ் புத்தாண்டு வர இருக்கின்றது. எனவே பொதுமக்கள் தமது புத்தாண்டை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுவது மிகவும் சிறந்தது எனவும் தெரிவித்தார்.