கராத்தே பயிற்சியுடனான தரப்படுத்தல் பட்டி வழங்கி வைத்தல்.

முல்லைத்தீவு இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க பாடசாலையில் JKS கராத்தே கழகத்தினால் முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கல் மற்றும் தரப்படுத்தல்
பட்டி வழங்கள் நிகழ்வுகள் நேற்று(12) இடம்பெற்றுள்ளது.
மாவட்ட விளையாட்டுப் பிரிவினர் ஆதரவுடன் நடைபெற்ற இந் நிகழ்வில் தேசின்தன் ஆசிரியரால் பயிற்சி வழங்கிய மாணவர்களுக்கு கழகத்தின் தலைமை ஆசிரியர் ரோசி ஹரிந் அவர்களினால்
தரங்கனித்து சான்றிதழ்களுடனான பட்டிகனித்து வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லை நகர செல்வபுரம், கல்விப்பாடு, சிலாவத்தையை சேர்ந்த வீர வீராங்கனைகள் மற்றும் சிறார்கள் பாடசாலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு பட்டிகள் சான்றிதழ்கனை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.