ரணில் விரைவில் பாராளுமன்றத்துக்கு …..

ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஒரு மாதத்திற்குள் கட்சியின் தேசிய பட்டியல் இடத்தை ஏற்றுக்கொண்டு பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்க உள்ளார் என ஐதேகவின் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐதேகவின் ஒருமித்த முடிவின் பேரில் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருவதாக காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே வஜிர அபேவர்தன இப்படி தெரிவித்தார்.