யாழ். தென்மராட்சியைச் சேர்ந்த பெண் கொரோனாத் தொற்றால் சாவு!

யாழ்., தென்மராட்சி, நுணாவில் மேற்கு, கல்வயல் கிராமத்தைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
நோய் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த குறித்த பெண்ணுக்கு கடந்த 13ஆம் திகதி கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அவருடைய உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அதே நாள் கொழும்பு மஹரகம கொரோனாத் தடுப்பு வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டிருந்த நிலையில் அங்கு இன்று அவர் உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.